Kuruntokai Kaattum Maanudam [Tamil-தமிழ் Edition]: குறுந்தொகை காட்டும் மானுடம் (சங்க இலக்கிய ஆய்வுகள் Book 2)
By Annaiyappan S. A. Dr
What do you think about this eBook?
About
மனிதநேயச் சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டு, ஆக்கப்பூர்வமான அனுபவப்பூர்வமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் சேர்த்து எடுத்துக் கட்டியெழுப்பப்படும் இலக்கியங்களே உலகில் எந்நாளும் வாழும் இறவா இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவைகளைத் தமிழன் பாட்டென்று பகுத்தான்; தொகையென்று தொகுத்தான்; கணக்கென்று கணித்தான். நெடுந்தொகையிலும் குறுந்தொகையிலும் தலைவன் தலைவியிடையே தவழ்ந்தாடும் அன்பு நெஞ்சங்களில் நிழலாடும் மனிதநேய வெளிப்பாடுகள் பல உள்ளன. குறிப்பாகக் குறுந்தொகையில் வெடித்து விழும் மனிதநேயச் சிந்தனைகளைச் சேர்த்து எடுத்துத் தேனும் வார்த்து இலக்கிய விருந்து படைக்கின்றார் தமிழன்பன் அன்னையப்பன் அவர்கள். இலக்கியச் சுவை குன்றாது தலைவன் தலைவியின் இடையில் ஏற்படும் ஊடலையும் கூடலையும் அதற்குப் பின்புலமாக நிற்கும் இலக்கியப் பண்பாட்டுச் சூழலையும் எடுத்துக் காட்டி மனிதநேயம் மிளிர்வதைப் படம் பிடித்துக் காட்டும் பாணி பாராட்டுக்குரியதாகும். மேலும், புலவர்களின் உள்ளத்திலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நீண்டு நிலைத்த தமிழரின் வாழ்வு முறையிலும் வெளிப்படும் மனிதநேயச் சிந்தனைகளை அள்ளிக் கொடுக்கும் அழகும் போற்றுவதற்குரியாதாகும்; புகழ்ச்சிக்குரியதாகும்.
Download eBook
Link updated in 2017
Maybe you will be redirected to source's website